பிரபல எழுத்தாளர் ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள் நேற்று (7-12-17) இரவு 11.40க்கு காலமானார். அவருக்கு வயது 86.

ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன்  ஜூன் 1, 1932 அன்று பிறந்தார்.  தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்கள் எழுதி புகழ் பெற்றார். . இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

தனிப்பட்ட எழுத்தாளராக அறியப்பட்டதற்கும் மேலாக, நெடுங்காலம் குமுதம் என்னும் தமிழ் வார இதழில் ஆற்றிய பணிகளுக்காகவே இவர் அதிகம் அறியப்படுகிறார். அவ் வார இதழில் பல சிறுகதைகளும் தொடர்கதைகளும் புதினங்களும் மற்றும் அதன் சகோதரப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்த மாலைமதியில் பல குறு புதினங்களும் எழுதியுள்ளார்.

இவரது, அப்புசாமி மற்றும் சீதாப்பாட்டி என்னும் கதாபாத்திரங்கள் இறவாப் புகழ் பெற்றுள்ளன. 1963ஆம் ஆண்டில் இவ்விரு கதாப்பாத்திரங்களையும் கொண்டு முதல் கதையைக் குமுதத்தில் எழுதினார். தொடர்ந்து பற்பல நகைச்சுவைச் சிறுகதைகள், புதினங்கள் ஆகியவற்றை உருவாக்கினார். இவற்றில் சில ஜெயராஜ் ஓவியம் கொண்டு சித்திரக் கதைகளாகவும் வெளி வந்துள்ளன.’அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்’, ‘மாணவர் தலைவர் அப்புசாமி’, ‘அப்புசாமியும் 1001 இரவுகளும்’ ஆகியவை பிரபலமானவை. தற்போது அப்புசாமி.கொம் என்ற நகைச்சுவை வலைத்தளத்தை நடத்தி வருகிறார்.

‘அப்புசாமி – சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை’ என்ற அமைப்பையும், ‘அக்கறை’ என்ற அமைப்பையும் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.சிறந்த இசைக் கலைஞர்களைக் கொண்டு ‘அப்புசாமி – சீதாப்பாட்டி இசைக் கூடல்’ என்ற அமைப்பை சமீபத்தில் துவங்கி நடத்தி வருகிறார்.

இவரத மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு கு மூன்று மகன்கள் உள்ளனர்.

முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மறைந்தார்.

அன்னாரது இறுதி சடங்கு இன்று (8-12-17) பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறும்.

 

முகவரி :

 

ஜ.ரா. சுந்தரேசன்

(பாக்கியம் ராமசாமி)

பிளாட் நம்பர் 2, செஞ்சூரி மெய்டன்

புது நம்பர் 47 (பழைய எண் 22)

ஹாரிங்டன் ரோடு

சுரங்கப்பாதை அருகில்

சேத்துப்பட்டு

சென்னை – 600 031

தொடர்பக்குச அனில்ராஜ் மொபைல் எண்:  7358671700