சேலம்

சேலம் சின்னப்பம்பட்டியில் பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் மைதானம் அமைத்துள்ளார்.

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரரான நடராஜன் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.  இவர் தனது  யார்க்கர் பந்து வீச்சால் பல முன்னணி பேட்ஸ்மன்களின் விக்கட்டுகளை எடுத்து புகழ் பெற்று இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர் ஆவார்.

இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் காயம் காரணமாகப் பங்கு பெற முடியாத நிலை ஏற்பட்டது.  நடராஜன் சொந்தமாக கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் தொடங்கி இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.   இவர் தனது அகாடமி மூலம் பல இளம் கிரிக்கெட் வீரர்களைத் தயார் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது பயிற்சி வீரர்களுக்காகச் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் சொந்தமாக கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்துள்ளார்.  அவர் இது குறித்து தனது டிவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  ஏராளமான ரசிகர்கள் நடராஜனுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.