பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி ஐசியு-வில் அனுமதி..!

Must read

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி இருதய கோளாறு காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரைப்பட காமெடி நடிகர்களில்  நடிகர் போண்டா மணியும் குறிப்பிடத்தக்கவர். இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர். இவரது இயற்பெயர் கேதீஸ்வரன். போண்டா மணியுடன் உடன் பிறந்தவர்கள் 16 பேர். அவர்களில் 8 பேர் அங்கு நடைபெற்ற இனக்கலவரத்தில் கொல்லப் பட்டனர். இதையடுத்து அகதியாக ராமேஸ்வரம் வந்த அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளதுடன்,  போண்டா மணி வடிவேலுவுடன் பல படங்களில் நடித்துள்ளார். இதுவரை 175க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில்  அவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர், போண்டா மணியை  சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தற்போது அவசர  சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு   மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

More articles

Latest article