சென்னை:
பிரபல திரைப்பட நடிகர் குள்ள ராஜா, உடல் நலிவுற்றதால் வறுமையில் தவிக்கிறார்.
திரைப்படங்களில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்த குள்ள நடிகர் ராஜா தற்போது சென்னை வியாசர்பாடியில் வசித்து வருகிறார்.
தனது 24 வயதில் கற்பகம் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.  இவரும் குள்ளமான நடிகை தான். இவர்,  பேரழகன் படத்தில் சிநேகா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
இவர்களுக்கு ஆனந்த் என்ற மகன் இருக்கிறார்.  22 வயது ஆன இவரும் குள்ளமாகவே இருக்கிறார்.

ராஜா - கற்பகம் - ஆனந்த்
ராஜா – கற்பகம் – ஆனந்த்

இதனால் இவர்கள் மூவருக்கும்  உடல் ஊனமுற்றவர்கள் என்ற சான்றிதழை அரசு வழங்கியுள்ளது.
திரைப்படங்களில் நடித்தாலும் வருமானம் போதாத நிலையில் சிரமப்பட்டனர். இந்த நிலையில் ராஜாவுக்கு கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்.
எனவே குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கும் இவர்கள் வீட்டின் ஒரு பகுதியை கடையாக மாற்றி ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றார்கள்.
மனைவி கற்பகம் ஜவுளி வியாபாரத்தை பார்த்துக் கொள்வதுடன், கணவரின் மருத்துவ செலவுகளையும் கவனித்துக்கொள்கிறார்.
“எங்களது துயரமான  நிலையை கருத்தில் கொண்டு, இரக்கம் காட்டி தமிழக அரசு உதவிபுரிய வேண்டும்” என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.