சென்னை: “இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை, ஆனால் மத்தியஅரசு இந்தியை திணிப்பதாக ஆளும் அரசு பொய் பிரச்சாரம் செய்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மத்தியஅரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி வருகிறது. அதன்படி, மும்மொழிக்கொள்கையை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள், தாய்மொழி உடன் ஆங்கிலம் மற்றும் தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு, இதை ஏற்க மறுத்து வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டிய கல்வி நிதியை மத்தியஅரசு தர மறுக்கிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த விவகாரத்தை திமுக அரசு, இந்தி திணிப்பு என கூறி வருகிறது. மாணவர்கள் வேறு விரும்பிய மொழியை கற்கற்லாம் என்பதே, இந்தி திணிப்புதான் என கூறி வருகிறது. இதையடுத்து, மாணவர் சமுதாயம், இளைஞர் சமுதாயத்தினரை திசை திருப்பி மத்தியஅரசுக்கு எதிராக போராடி தூண்டி வருகிறது. நாளை (25ந்தேதி) திமுக சார்பில் மாணவர்கள் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னை அடையரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கொடியேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனை அடுத்து பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “அண்ணா முதலமைச்சராக இருந்த போது இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார். தமிழக மக்களும், தமிழக அரசியல் வாதிகளும் இருமொழிக் கொள்கையைத்தான் ஆதரிக்கிறார்கள். ஆனால், தற்போது மத்தியஅரசு தாய்மொழி மற்றும் ஆங்கிலத்துடன் வேறு ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான கூறுகிறது. ஆனால், மதமத்திய அரசு இந்தியை மட்டுமே கற்றுக்கொள்ள வண்டும், திணிப்பதாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பொய் பிரசாரம் செய்கின்றனர்.
சமூக மக்கள் விரோத திமுகவை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அடியோடு அழிக்கும் என்றவர், தமிழ்நாட்டில், தினம் ஒரு கொலை நடக்கிறது, தினம் ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. திமுகவை வீழ்த்துவது தான் எங்களது அரசியல் வியூகம் என்று கூறியதுடன், தமிழக அரசியலில் ஊழல் மலிந்து கிடக்கிறது, அதனால் தான் மத்திய அரசு நிதியை பார்த்து பார்த்து கொடுக்கிறார்கள் என்றவர், தேர்தல் நேரத்தில் நிறைய மாற்றம் வரும் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வலுவாக இருக்கும் என்றவர், சாதி வாரிய கணக்கிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தரும்என்று தெரிவித்துள்ளார்.