விழுப்புரம்: திண்டிவனத்தில் போலி வாக்காளர் அட்டை தயாரித்த அச்சகத்திற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாடு முழுவதும் போலியான அடையாள அட்டைகளை தயாரித்து வருவதில் சிலர் திருட்டுத்தனமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஆதார் அட்டை, வோட்டர் ஐடி, ரேசன்கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை தயாரித்து வழங்கி முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த ஆண்டு, பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கத்தில் உள்ள, தனியார் கணினி மையத்தில், போலியாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை தயாரித்து கொடுப்பது தெரிய வந்த நிலையில், அந்த மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த கணினி மைய உரிமையாளளர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், திண்டிவனத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், போலியாக வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து வந்த அச்சகதுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சீல் வைத்தார். போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் இயந்திரங்களை கைப்பற்றி உரிமையாளரிடம் விசாரணை நடத்தினார்.
கலெக்டர் அன்பு செல்வனுக்கு புகார் வந்தது.இது குறித்து அவர், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ்விற்கு தகவல் அளித்தார். மேலும் அச்சக மையத்தில் இருந்து, போலி அடையாள அட்டைகள், ‘பிரின்ட்டிங்’ இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.