டெல்லி: போலிச் செய்திகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை? தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
போலிச் செய்திகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? . நாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் விரிவான நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு வந்திருப்பவை என்ன என மாநிலங்களவையில் என திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என் சோமு கேள்வி எழுப்பினார். அதுபோல, தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? திமுக எம்.பி. கிரிராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
திமுக எம்.பி. கனிமொழி சோமு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தொழில்துறையை ஒழுங்குபடுத்துவதற்கான முக்கிய புள்ளிகள் மற்றும் காலக்கெடுவுடன் கூடிய அவசரச் சட்டம் அல்லது மசோதாவை அறிமுகப்படுத்த அரசு உடனடியாக முன் வர வேண்டும் மற்றும் மார்ச் 15, 2024 அன்று வெளியிடப்பட்ட ஆலோசனையின் கீழ் நிறுவனங்கள் மீது அரசாங்கம் ஏதேனும் கட்டுப்பாடு விதித்திருந்தால் அதன் விவரங்கள் என்ன? என அவர் கேட்டதுடன், மற்றொரு கேள்வியில் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன? என வினவினார்.
போலிச் செய்திகள் ஒரு பெரிய பிரச்சனையாக மாறி பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. போலிச் செய்திகள் பரவுவதற்கு அவற்றின் பங்களிப்பை அளவிட டிஜிட்டல் தகவல்களைப் பரப்பும் முக்கிய செயலிகள்/செய்தி நிறுவனங்கள் குறித்து ஆய்வுகள் அவசியம். தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க அரசாங்கம் திட்டமிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் செயல்படும் குடும்பல நல நீதிமன்றங்களின் எண்ணிகை எவ்வளவு? மாநில வாரியான எண்ணிக்கை என்ன? என்றும் இந்நீதிமன்றங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை, தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் மாநிலவாரியான விவரங்கள் என்ன? என்றும் மாநிலங்களவையில் திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தீர்வு காண்பதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனவா? அப்படியானால் அதற்காக ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எனவும் அவர் குறிப்பிட்டு கேட்டுள்ளார்.
இந்தியாவில் உள்நாடு, வெளிநாடு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்பது உண்மையா? அப்படியானால் அதற்கான காரணங்கள் என்ன? என்று நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு புத்துயிர் அளிப்பதற்கு தமிழ்நாட்டிலும் நாடு முழுவதிலும் ஒன்றிய அரசு எடுத்த முன்முயற்சிகள் என்ன? கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்காகவும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கேட்டுள்ளார்.