சென்னை: மருத்துவ படிப்பில் சேர போலி நீட் தேர்வு சான்றிதழ் அளித்த மருத்துவ மாணவியையும், பல் மருத்துவரான தந்தையையும் போலி சான்றிதழ் செய்து கொடுத்த பரமக்குடி கம்யூட்டர் சென்டர் உரிமையாளரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் கூறப்பட்டது. போலி இருப்பிடச்சான்றிதழ்,  போலிநீட் தேர்வு சான்றிதழ் போன்றவை கொடுத்து, மருத்துவப் படிப்பில் இடம்பிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

நடப்பாண்டில்,   போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து, மருத்துவப் படிப்பில் சேர்ந்த , 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர்.

இநத நிலையலி, ராமநாதபுரம் மாவட்டச்சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில்,  27 மதிப்பெண் எடுத்துவிட்டு 610 மதிப்பெண் என போலி  சான்றிதழ் கொடுத்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. மருத்துவ கலந்தாய்வின்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டபோது,  என்டிஏ வழங்கியிருந்த சான்றிதழில் 27 மதிப்பெண்களும், மாணவி கொண்டுவந்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அது போலியானது என தெரியவந்தது.  இதையடுத்து, காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.

காவல்துறையினர் போலி நீட் சான்றிதழ் கொடுத்ததாக மாணவி மற்றும் அவரது தந்தை மற்றும், போலி சான்றிதழ் கொடுத்த பரமக்குடி கம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மாணவி மற்றும் அவரது தந்தை மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் தந்தை, பல் மருத்துவராக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி, அவரது தந்தை, கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் ஆகியோர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.