சட்டக்கல்லூரிகள் காசு வாங்கிக்கொண்டு சட்ட பட்டத்தினை வழங்கி வருவதால் பல போலி வக்கீல்கள் உருவாவதை பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென என சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
நீதிபதிகள் வீ.ராமசுப்ரமணீயன் மற்றும் என்.கிருபாகரன் அடங்கிய அமர்வு, “லெட்டர் பேட் கல்லூரிகள் காசுக்கு பட்டங்கள் விற்பதை பார் கவுன்சில் அமைதியாக வேடிக்கைப் பார்த்து வருவது அவமானகரமானச் செயல் என நீதிமன்றம் கண்டித்தது. நீதிமன்றத்தின் வளாகத்திற்குள் திரிந்துக் கொண்டிருக்கும் ஒருவர் திடீரென ஒரு நாள் வக்கீலாய் அவதாரமெடுக்கின்றார்கள். எந்த வகுப்பிற்கும் செல்லாமல் எவ்வாறு வக்கீல் ஆகின்றனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த அபாயத்தை தடுக்க பார் கவுன்சில் உடனடியாக தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
தகுதியற்ற நபர்களுக்கு சட்ட்க் கல்லூரிகள் பட்டங்களை விரற்கின்றன்ர் என்பது இதன் மூலம் தெளிவாக நிரூபணம் ஆகின்றது மற்றும் எந்த வகுப்பிற்கும் செல்லாமல் ஒருவரால் வக்கீல் பட்டத்தை வாங்கமுடியும் சூழ்நிலை நிலவுகின்றது எனக் கூறி தமிழ்நாடு பார் கவுன்சிலில் உறுப்பினர் சேர்க்கைக்கான நெறிமுறைகளை தொடர அனுமதித்தனர்.
இது எதிர்காலத்தில் தவறானவர்களின் கைகளில் சட்ட்த்துறை சிக்கிக் கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கின்றது. உண்மையில் பார்க்கப் போனால், ஏற்கனவே கிரிமினல்கள் வக்கீல்கள் ஆகியுள்ளனர்.
வேலையில் இருந்துக் கொண்டே வக்கீல் பட்டம் வாங்கியவர்களை பார் கவுன்சிலில் உறுப்பினராக விடாமல் கண்காணிக்கவேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.