“93 இல்ல.. இப்ப எனக்கு வயசு 73”- உற்சாகத்தில் கலைஞர் அடித்த கமென்ட்!

Must read

7373
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியின் புதிய தமிழகம் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் முத்துக்குமார். இன்று திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. புதிய தமிழகம் வேட்பாளரை பாராட்டி பேசிய விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.-
“ஓட்டு கேட்டு போறப்ப.. கட்சிய மட்டும் பார்த்தது ஒரு காலம்.. இப்ப கட்சிய மட்டும் பார்க்கிறது இல்ல.. வேட்பாளரையும் பார்க்கிறாங்க.. வேட்பாளர் சரியில்லைன்னு வச்சிக்கங்க.. இந்த வேட்பாளரை ஏன் கூட்டிட்டு வந்தீங்கன்னு கேட்பாங்க.. முத்துக்குமார் ரொம்ப பெரிய படிப்பெல்லாம் படிச்சவரு.. நான்கூட கேட்டேன்.. ஏம்ப்பா இவ்வளவு படிச்சிட்டு இந்த வேலைக்கு வந்திருக்கன்னு கேட்டேன். பணத்தை பெரிசா நினைச்சிருந்தா.. 5 லட்ச ரூபாய் சம்பளம் கிடைக்கிற வேலையிலேயே இருந்திருப்பேன்.. எல்லா சமுதாய மக்களுக்கும் பணியாற்றணும்னு நினைக்கிறேன்.. அதான் அரசியலுக்கு கொண்டு வந்து விட்ருச்சு.. இப்ப வேட்பாளரும் ஆயிட்டேன்னாரு.. இவ்வளவு படிச்ச ஒரு ஆளை.. இத்தனை வயசு குறைச்சலான ஒரு இளைஞரை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி இப்பத்தான் வேட்பாளரா பார்க்குது.. இந்த பொம்பள ஹெலிகாப்டர்ல வருது.. ஹெலிகாப்டர்ல போகுது.. பொம்மை மாதிரி வருது.. பொம்மை மாதிரி போகுது.. 93 வயசுல கலைஞர் ட்ரெய்ன்ல வர்றாரு.. 3-ஆம் தேதி இங்கே பிரச்சாரத்துக்கு வர்றாரு கலைஞர்.. நான்கூட இந்த வயசுல நீங்க வரணுமா? வேணாம் தலைவரே.. எங்க மாவட்டத்த நாங்களே பார்த்துக்கிறோம்னு சொன்னேன்.. அதுக்கு தலைவர் “கட்சிக்காரர்களை.. பொது மக்களை பார்க்கும் போது எனக்கு வயசு குறையும்.. 93 வயசுல இருந்து 73 வயசா இப்ப குறைஞ்சிருச்சு.. அதை நீங்க தடுக்க பார்க்கிறீங்களா?” அப்படின்னு கேட்டாரு. இந்த மாவட்டத்துல 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதை கலைஞர் காலடியில வைக்கணும்..” என்ற போது மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது”.

More articles

Latest article