(ஏ) மாற்று டாக்டர்கள்!

Must read

கே.எஸ். சுரேஷ்குமார்  அவர்களின் முகநூல் பதிவு:
 
07-1425711698-xiaomi-mobiles-600
மாற்று வைத்தியம் எனும் பெயரில் பாரம்பரிய மருத்துவமுறைகளுக்கு முற்றிலும் எதிர் திசையில் சில மருத்துவமுறைகள் முளைக்க ஆரம்பித்திருக்கிறது. தொடு சிகிச்சை தொடாமல் சிகிச்சை ஊசியை குத்துவது பாசியைக் குத்துவது பிரார்த்திப்பது இறைவழி சிகிச்சை தரைவழி சிகிச்சை என ஆங்காங்கே வீட்டின் முன் ஃப்ளெக்ஸ் போர்டுகள் தொங்கவிட்டிருக்கிறார்கள். எல்லோரும் பெயருக்குப் பின்னால் எம்.டி எனப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். தேனி வத்தலக்குண்டு விருதுநகர் மற்றும் பொள்ளாச்சி சந்தைகளில் கிலோ கணக்கில் எம்டி விற்பார்கள் போலிருக்கிறது.
வைத்தியத்தில் மனசு முக்கியப்பங்கு வகிக்கிறதுதான். மறுப்பதற்கில்லை. அதற்காக ஆக்ஸிடெண்ட்டில் அடிப்பட்டு இருக்கும்போது அமைதியாக தியானமா செய்ய முடியும்? உணவு, வாழ்க்கை முறை எல்லாமும் தான் நோயை தீர்மானிக்கிறது வேண்டுமானால், உணவுப்பகழக்கத்திற்கும் வாழ்வு முறைகளுக்கும் எதிர்த்திசையில் செல்லலாம். அது வருமுன் காப்பதே அன்றி வந்த நோய்க்கு எப்படி தீர்வாகும் எனத்தெரியவில்லை.
ஐந்தாறு அரியர்கள், மற்றும் மேல்நிலைப்பள்ளியில் தோற்றவர்கள் வேறு எந்த வேலையும் கிடைக்கப் பெறாதவர்கள் கல்யாண வயது வந்தவுடன் பெண் தேடுவதற்கென்றே அவர்களின் இன்ன உத்தியோகம் எனக்காட்டிக்கொள்வதற்கு அவசர அவசரமாக அலைபேசி ரீசார்ஜ் கடைகள் வைத்து கல்யாணம் செய்து கடையை காலிசெய்து திருப்பூர்ப் பக்கம் செட்டில் ஆவது இப்போது ஃபேஷனாகிவருகிறது. இதற்கு சற்றும் குறைவில்லாதது உடனடி மருத்துவர்களின் எம்,டி பட்டங்கள்.
என் சர்வீஸ் செண்டருக்கு அருகில் ஒருதம்பி அக்கு டச் சிகிச்சை மையம் என்று வைத்து செம கல்லா கட்டிக்கொண்டிருந்தார். நேரடியாக ஒருமுறை வைத்தியம் செய்துவிட்டு அடுத்தமுறை அலைபேசி வழியாக நோயைச்சொன்னால் இவர் இங்கிருந்தே பிராத்தித்து நோய் தீர்ப்பார்.சில சமயம் என சர்வீஸ் செண்டர் வந்து பேசிக்கொண்டிருக்கும் போது ஃபோன் வரும். விசாரித்து ”கொஞ்ச நேரம் லைன்ல வெயிட் பண்ணுங்க” பிராத்தனை பண்றேன் அஞ்சு நிமிஷத்துல சரியாயிடும் என்பார். ஒரு நாளைக்கு ஒரு காலாவது இப்படி வரும். அப்படி கால் வந்து அவர் பிரார்த்திப்பதை பார்க்க அவ்வளவு தெய்வாம்சமாக இருக்கும் சுவற்றில் சாய்ந்து மொபைலையே பார்த்துக்கொண்டு முணுமுணுத்துக்கொண்டிருப்பார்.
கடையில் வேலை பார்த்த பையனிடம் ஒரு நாள் கேட்டேன். அவர் பிரார்த்னை பண்றப்ப முணுமுனணுத்துட்டே இருக்காரே நீதான் அவர் கிட்டயே இருக்கியே என்னன்னு பார்த்து நீயும் தொழில் கத்துக்கக்கூடாதா என்றேன். “போங்கண்ணே, ஃபோன் பண்ற பேஷண்ட்டை வெயிட் பண்ணச்சொல்லிட்டு இவர் மொபைல்ல பிட்டு படம் பார்ப்பார்” என்றான்.
 

More articles

Latest article