சென்னை: தமிழ்நாடு அரசு ரூ.1000 இலவசமாக வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களில் போலி விண்ணப்பங்கள் நடமாடுவ தாக தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெண்களுக்கு அரசு வழங்கும் ரூ.1000 உதவித்தொகை திட்டமான, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு போலி விண்ணப்பங்கள் வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஜூலை 15 ஆம் தேதி முதல் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கனவே விரிவான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். கிராமங்கள் தோறும் அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போலி விண்ணப்பம் குறித்த எச்சரிக்கையை அரசு கொடுத்திருக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மட்டுமே வழங்கப்படும் என அரசு கூறியுள்ளதுடன், இந்த விண்ணப்படங்கள் இலவசமாகவே மட்டும் விநியோகிக்கப்படுகிறது.
ஆனால், சிலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் போலி விண்ணப்பங்களை விநியோக்கிப்பதாக புகார்கள் எழத் தொடங்கி உள்ளது. இதற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி, பொதுமக்கள் யாரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க போலி விண்ணங்களை வாங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலங்களில் இதுதொடர்பாக விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியிருக்கும் அவர், தனிநபர்கள், கடைகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வாங்கக்கூடாது என கூறியுள்ளார். நீங்கள் வைத்திருக்கும் விண்ணப்பங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள அரசு அலுவலங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தின் உண்மை தன்மையை தெரிந்துகொள்ளுமாறு பொதுமகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் விநியோகிக்கப்படும் போலி விண்ணப்பங்களை பெற்று ஏமாற வேண்டாம். இந்த தகவலை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான செய்தியாகும். இலவசமாக கிடைக்கக்கூடிய விண்ணப்பத்தை பணம் கொடுத்து வாங்காதீர்கள்.
இன்னும் இரண்டு நாட்களில், அதாவது ஜூலை 15 ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்க உள்ளது. அதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு இதுவரை பயனாளியாக இல்லாதவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், அரசு அறிவித்திருக்கும் மூன்று விதிமுறை தளர்வுகளால் புதியதாக விண்ணப்பிக்க வாய்ப்பை பெற்றிருப்பவர்கள் எல்லோரும் இந்த முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]