சென்னை,

மிழகம் உள்பட தென்மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று லாரி உரிமையாளர்களுடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இன்று  2வது நாளாக லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.

டீசலுக்கு விதிக்கப்பட்ட வாட் வரி உயர்வை ரத்து செய்யவும், இன்சூரன்ஸ், சாலை வரி, ஆர்.டி.ஓ கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தமிழகத்தில் சரக்கு லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு மணல் லாரி உரிமையாளர்கள், எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள், சரக்கு புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக வரவேண்டிய பெரும்பாலான லாரிகள் இயங்கவில்லை. குறைவான அளவிலான சிறு லாரிகளே வருவதால் காய்கறிகளின் விலை  அதிகரித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக  தினசரி 5 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு பரிவர்த்தனை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.