சென்னை:
ஆசிரியர் தகுதித்தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த சுமார் 1500 ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 2012ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்ட்டு வருக்றது. கடந்த 2014-ம் ஆண்டு அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணியில் பணியாற்றி வரும் ஆசிரி யர்களும் தகுதி தேர்வு எழுதி பாசாக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில், சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் (பணி நிரந்தரம் ஆகாதவர்கள்) ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் தேவையில்லை என்று கூறப்பட்டது. பின்னர் தனியார் பள்ளிகளில் தரமற்ற ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், , அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணியில் (பணி நிரந்தரம் ஆகாதவர்கள்) இருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும் என்றும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவிட்டால் பணியில் இருந்து நீக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் 2014 – 2015 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த 5 ஆண்டுகாலத்தில் பல ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர்.
அனால், இதுவரை தேர்ச்சி எழுதியும், தேர்ச்சி பெறாமல் சுமார் 1500 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அவர்களின் 5 ஆண்டுகால அவகாசம் ஏப்ரலுடன் நிறைவடைய உள்ளது. இதையொட்டி, தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான ஊதியத்தை கருவூலத்துக்கு அனுப்பாமல் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.