ஃபேஸ்புக் நிறுவனரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.7.5 லட்சம் கோடிகள்!

Must read

லாஸ்ஏஞ்சலிஸ்: பிரபல சமூகவலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுபெர்க்கின் சொத்து மதிப்பு ரூ.7.5 கோடியாக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு ஆண்டில் பேஸ்புக் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 30% வரை உயர்ந்துள்ளதால், ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பில், இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கோடி கூடுதலாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உலகின் மிகப்பெரும் பணக்காரர்களுக்கான கிளப்பில் அமேசானின் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு அடுத்தபடியாக மார்க் ஜுக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார்.

இதன்படி, அமெரிக்க டாலர் மதிப்பில் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

More articles

Latest article