இந்திய தேர்தல் சூடுபிடித்துவரும் நிலையில் இந்திய அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் மூலம் செய்யும் விளம்பரம் அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே பத்திரிக்கை.காம் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் டிக்டாக் செயலியை நடத்தும் பைட்டான்ஸ் நிறுவனத்தின் இன்னொரு செயலியான ஹெலோ செயலி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அரசியல் சார்ந்த விளம்பரங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
மொத்தம் 11,000 விளம்பரங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது, இதன் மதிப்பு 77 கோடி ஆகும்.
ஹெலொ செயலி எந்த அரசியல் கட்சியை மையப்படுத்தி விளம்பரம் செய்யாவிட்டாலும் அரசியல் கட்சி, அரசியல் பிரமுகர்கள், நாட்டின் முக்கியப் பிரச்னைகள் குறித்து விளம்பரம் செய்துள்ளது அதுமட்டுமல்லம் இதில் யார் விளம்பரம் கொடுத்தார்கள் என்ற வெளிப்படைத் தன்மை இல்லாததும் ஒரு காரணம்
அதுமட்டுமல்லாமல் பேஸ்புக்கில் ஒரே நிறுவனத்தின் அதிகப்படியான விளம்பரத்தை பேஸ்புக் தடை செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இதே பைட்டான்ஸ் நிறுவனத்தின் முதலீட்டில் விகோ என்ற செயலியின் 49 விளம்பரங்களும், ஹெலோ செயலியின் நேரடி இந்திய போட்டியாளரான ஷேர்சாட் நிறுவனத்தின் 7 விளம்பரங்களையும் பேஸ்புக் தடை செய்துள்ளது
தடைசெய்யப்பட்ட விளம்பரங்களின் மொத்த மதிப்பை ஹெலோ நிறுவனத்திடம் ஒரு பிரபல பத்திரிக்கை மின்னஞ்சல் மூலம் கேட்டபோது ஹெல்லோ நிறுவனம் அந்த விபரங்களை தர மறுத்துள்ளது.
இந்தியாவில் அதிகமாகப் பார்க்கப்படும் செய்தி, பொழுதுபோக்கு செயலிகளில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதை நாம எப்போதும் கவனத்தில் கொள்ளவேண்டும்
-செல்வமுரளி