மூத்த பத்திரிகையாளர் ஜீவசுந்தரி பாலன்
மீண்டும் மீண்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆலோசனைகள் சொல்லப்படுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக, ஆண்களுக்கு ஆலோசனை சொல்லலாம். பெண்களை சமமாக நடத்தும்படியும், உடைமைப் பொருளாக நினைக்காமல் ரத்தமும் சதையும் உயிரும் உள்ள சக மனுஷியாக, மனிதப்பிறவியாக நினையுங்கள். என்பதை அடிக்கடி வலியுறுத்தலாம்.
அதை விடுத்து பாதுகாப்பு என்று பெண்ணை வீட்டுக்குள் முடக்கும் நடைமுறைகள் எரிச்சலூட்டுகின்றன. படங்களைப் பதிவிடும்போது அதை யார் பார்க்கலாம் என்றவிதிமுறைகளைப் பெண்கள் பின்பற்றினால் போதும். படங்களையே பதிவிடாதீர்கள், அப்படி பதிவிட்டால் மார்ஃபிங் செய்வார்கள்தான் என்று அவர்கள் தரப்புக்கு வரிந்து கட்ட வேண்டாமே.
ஒரு முன்னாள் காவல் துறை அதிகாரியாக மட்டுஉமல்லாமல், தற்போது ஆளுங்ககட்சியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இர்க்கும் திரு நடராஜ் அவர்கள், ஆளுங்கட்சியைப் பாதுக்காக்கத்தான் நினைக்கிறாரே தவிர, பெண்களின் மன உணர்வுகளை அவர் பெரிதாக மதிக்கவில்லை.. மார்ஃபிங் செய்பவனும், அதைப் பார்த்து ரசிப்பவர்களும்தான் அவமானப்பட வேண்டுமே தவிர, சம்பந்தப்பட்ட பெண்கள் அல்ல. அத்தகைய விழிப்புணர்வைத்தான் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமே தவிர, பயமுறுத்தக் கூடாது.
மொத்தத்தில் பாலின சமத்துவம் என்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.