ட்டத்திற்கு புறம்பாக வேறொரு நிறுவனத்தின் வி ஆர் எனப்படும் மெய் நிகர் தொழில்நுட்பத்தை பிரபல ஃபேஸ்புக் நிறுவனம், திருட்டுத்தனமாக பன்படுத்தியது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், பேஸ்புக் நிறுவனத்துக்கு, 500 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனர் மார்க் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸெனிமேக்ஸ் என்ற வீடியோ கேம் தயாரிக்கும் நிறுவனம்  தனது புராஜக்ட் ஒன்றுக்காக சில கணினி குறியீடுகளை அமைத்து வைத்திருந்தது. இதை பேஸ்புக்கின் ஒரு அங்கமான  ஆக்குலஸ் திருட்டுத்தனமாக பயன்படுத்திவிட்டது. (2014 ஆம் ஆண்டு ஆக்குலஸ் என்ற நிறுவனத்தை, ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. )

இது குறித்து ஸெனிமேக்ஸ் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. விசாரணைக்குப் பிறகு,  “பேஸ்புக் நிறுவனம் திருட்டுத்தனமாக இன்னொரு நிறுவனத்தின் வி.ஆர். குறியீடுகளை பயன்படுத்தி  உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே பேஸ்புக் நிறுவனத்துக்கு 500 கோடி டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று  நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இத்தீர்ப்பால் பேஸ்புக் நிறுவனர் மார்க், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில், “தொடர்ந்து சட்ட நவடிக்கைகளில் ஈடுபட்டு, எங்கள் மீது தவறு இலலை என்பதை நிருபிப்போம்” என பேஸ்புக்  நிறுவனம் அறிவித்துள்ளது.