நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம், தனது நிறுவனத்தில்  பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், தனது நிறுவனத்தின் பெயரை  மெட்டா என மாற்றியது. இதுவே, சமூக வலைதளங்களான, வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மாதிரியான தளங்களுக்கு தாய் நிறுவனம். இதன் தலைவராக மார்க் ஜூக்கர்பெர்க் (mark zuckerberg) இருந்து வருகிறார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவைத் தொடர்ந்து, பெரு நிறுவனங்களும், தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. கூகுள், அமேசான், டிவிட்டர்   உள்பட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களில் பல ஆயிரம்பேரை பணி நிக்கம் செய்த நிலையில், உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான மெட்டா, கடந்த (2022) நவம்பரில் 13 சதவீதம் ஊழியர்களை குறைத்துள்ளதுஅதாவது முதல்கட்டமாக  13ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்திருந்தது.

அப்போது, மேலும் 7000 பேரை 2023 மார்ச் மாதம்,  2வது சுற்றில் பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவின. அதன்படி,  தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாளர்கள் அதன் தற்போதைய ஊழியர்களில் 10 சதவீதம் அல்லது ஏறக்குறைய 7000 பேர் குறைவான செயல்திறன் கொண்டவர்கள்  மார்ச் மாதத்திற்குள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று  சுட்டிக்காட்டப்பட்டது.  விளம்பர வருவாயில் மந்தநிலையைக் கண்ட மெட்டா, மெட்டாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் ரியாலிட்டி தளத்திற்கு கவனம் செலுத்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்யவும், பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

 தனது நிறுவனத்தை சமன் செய்யவும், மேலாளர்களுக்கு தொகுப்புகளை வழங்கவும், தேவையற்றதாகக் கருதும் முழு குழுக்களை குறைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படிதான் தற்போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய மெட்டா முடிவெடுத்துள்ளது. விளம்பர வருவாயில் மந்தநிலையைக் கண்ட மெட்டா, மெட்டாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் ரியாலிட்டி தளத்திற்கு கவனம் செலுத்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்யவும், பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.