டந்த 2016ம் ஆண்டு  அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக் மூலம் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவாக பதிவுகள் வெளியானதாகவும், அதன் காரணமாகவே அவர் வெற்றிபெற்றதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையின்போது, பேஸ்புக் தகவல்களை  அதன் மூலம் டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்த கேம்பிரிட்ஜ் அனால்டிகா  நிறுவனத்தினால்  50 மில்லியன் மக்களின் பிரத்தியேக தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

இந்த குற்றச்சாட்டை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கும் ஒத்துக்கொண்டார்.

பேஸ்புக் இழைத்த தவறால், அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம், மில்லியன் கணக்கான பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாகவும் பேஸ்புக் நிறுவனர்  மார்க் சக்கர்பேர்க் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனத்தின் தலைவர் அலெக்சாண்டர் நிக்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மார்க் ஜுக்கர்பெர்க்கை, அமெரிக்க செனட் சபை, பிரிட்டன்  மற்றும் ஐரோப்பிய பாராளு மன்றங்கள்  விசாரணைக்கு  அழைத்துள்ளது.

அமெரிக்க செனட் சபை ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்த மார்க் ஜுக்கர்பெர்க், தரவு துஷ்பிரயோகம் நிகழ்வுகள் பற்றி தெரியாது என்றும்,  ஆனால்  ஒரு பெரிய அளவிலான தரவுகள் திருடப்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும்,  என்னுடைய  தனிப்பட்ட தரவுகளும்  தீங்கிழைக்கும் மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளார்.

இதில் “நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது” என்றும், இது குறித்து தான் “மிகவும் வருந்துவதாகவும்” “நேர்மை யற்ற செயலிகளுக்கு” எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனது முகநூல் பதிவில்  மார்க் ஜுக்கர்பெர்க், தெரிவித்துள்ளார்.