ஜெனீவா:
மெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் சந்தித்துக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் சந்தித்துக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.

உலகின் முன்னணி வல்லரசு நாடுகளாக அறியப்படுபவை அமெரிக்காவும், ரஷியாவும் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளில் எதிரெதிர் பார்வை கொண்டவை. ஒன்றுக்கொன்று போட்டியாக உள்ள இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேசிக் கொள்வது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் இன்று சந்தித்துக் கொண்டனர்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு ரஷிய அதிபருடன் நடைபெறும் முதல் நேரடி சந்திப்பு என்பதால் உலகின் கவனம் இந்த சந்திப்பின் பக்கம் திரும்பியுள்ளது. இந்த சந்திப்பில் அணு ஆயுதம் குறைப்பு, கொரோனா தொற்று பரவல் நிலைகள், உக்ரைன் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு உலக அரசியல் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.