வெவ்வேறு காரணங்களுக்காக, எப்போதும் கண் கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் வாய்ப்பு குறைவு என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், அதேசமயம், அதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றுள்ளனர்.

இந்த ஆய்வு சீனாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 276 கொரோனா நோயாளிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில்தான் இந்த முடிவு கிடைத்துள்ளது.

ஒருநாளைக்கு 8 மணிநேரத்திற்கும் மேலாக கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு, கொரோனா தொற்றிலிருந்து ஒப்பீட்டளவில் பாதுகாப்பு கிடைக்கும் என்று அந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

ஏனெனில், கண்ணாடி அணிந்திருப்பவர்கள், தமது கண்களை நேரடியாக தொடக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தவகையில், வைரஸ் கண் வழியாக உடலினுள் புகும் வாய்ப்பு பெரிதும் குறைகிறது என்றுள்ளனர் அவர்கள்.