நீட் தேர்வுக்கு விண்ணபிக்க கால அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு

Must read

புதுடெல்லி:
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தகுதி தேர்வான இளங்கலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் வருகிற ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும்,
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.nta.ac.in, https://neet.nta.nic.in என்ற இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

More articles

Latest article