சென்னை:  
மிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை, மழை, வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.