மதுரை: திருச்செந்தூர் கோயிலில் தங்குவதற்கான தடையை நீட்டிப்பு செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. திருவிழா உட்பட எந்த நேரத்திலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்திற்குள் பக்தர்களை தங்க அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளது.

கந்த சஷ்டியின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்ள அனுமதி கோரி பொதுநல மனு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு, காலத்தின் சோதனைகளைத் தாங்கி நிற்கும் கோயில்கள் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்று கூறியதுடன்,  தற்போதைய சூழ்நிலைகளில் அங்கு தேவையற்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகவும், அதனால்,  க்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, கோயிலின் புனிதத்தை பேண வேண்டியுள்ளதால், பக்தர்கள் கோவிலுக்குள் தங்குவதற்கு அரசு விதித்த தடை சரியே என்று உத்தரவிட்டிந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோயில் பிரகாரத்தில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது நியாயமானது என கருதுவதாகவும், அதனால் அந்த தடை உத்தரவை நீட்டிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கோவில் வளாகத்தில் பக்தர்கள் விரதம் இருக்க யாகங்கள் நடத்த அனுமதியில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு.!