சென்னை:  மாநில கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் நிபுணர் குழு இன்று  2ம் கட்ட ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். அதன்படி, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமை யில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.  இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த குழுவினர் சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதல்கட்ட ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, இன்று  2ம் கட்ட ஆலோசனை  கூட்டம் நடைபெற்று வருகிறது.

மாநில கல்வி கொள்கையை உருவாக்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் நிபுணர் குழுவினர் 13 பேரும்  அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்