சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்துங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இணையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோரில் 67 சதவிகிதம் பேருக்கு இதுவரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் 10 நாட்களில் உலக சுகாதார நிறுவனம், ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளவாறு 70 சதவிகிதம் என்ற இலக்கினை தமிழகஅரசு எட்ட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு. தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில், தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் இன்னும் எட்டு வாரங்களில் 70 சதவீத என்ற தடுப்புபூசி இலக்கை எட்ட வேண்டும் என்று இலக்குடன், தடுப்பூசி போடும் வேகத்தை இரட்டிப்பாக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை ராணிப்பேட்டை, தூத்துக்குடி, திருப்பத்தூர் மாவட்டங்களில் 35 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம் மாவட்டங்களில் 36%, நெல்லை மாவட்டத்தில் 37%, தென்காசி, தஞ்சை புதுக்கோட்டையில் 38% தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வேலூர், தர்மபுரியில் 38% பேருக்கும், நாகை, மதுரை, திருவாரூர், மாவட்டங்களில் 39% பேருக்கும். சேலம், கடலூரில் 40% பேருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 41% பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.
திண்டுக்கல், அரியலூர், திருச்சி கிருஷ்ணகிரியில் 45 சதவீதத்துக்கும் குறைவாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவையில் 61 சதவீதம் பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 63 சதவீதம் பேருக்கும், சென்னையில் 60 சதம் பெயருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
70% பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைய உள்ளோம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்