கேப் டவுன்

டுத்த வாரம் முதல் தென் ஆப்ரிக்காவில் 12-17 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலால் இதுவரை 24,05 கோடி பேர் பாதிக்கப்பட்டு 48.99 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதில் அமெரிக்கா  முதல் இடத்தில் உள்ளது.   இந்தியா இரண்டாம் இடத்திலும் பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.   தென் ஆப்ரிக்காவில் இதுவரை 29.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 88,506 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இது சர்வதேச அளவில் 17 ஆம் இடமாகும்.  விரைவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்படலாம் எனவும் இதில் சிறார்களுக்குப் பாதிப்பு அதிக அளவி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  இதையொட்டி தென் ஆப்ரிக்காவில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.   அடுத்த வாரம் முதல் தென் ஆப்ரிக்காவில் 12-17 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்க சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் மாதத்துக்குள்ளாக நாட்டின் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த தென் அப்ரிக்கா  முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் 12 -17 வயதினருக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இந்த சிறார்களுக்கு. பைஸர்  நிறுவன தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.  இவர்களுக்கு பைஸர் தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே 12 -17 வயதினருக்கு செலுத்தப்படுகிறது.  அவர்களுக்கு தற்போது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரண்டாவது டோஸ் செலுத்தப் போவதில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.