சிம்லா:  இமாச்சல பிரதேசத்தில் 39 இடங்களில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி, பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நிலை உள்ளது. பாஜக 26 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. எக்சிட் போல் கருத்துக்கணிப்புகள், இழுபறி ஏற்படும் என கூறி வந்த நிலையில், அது பொய்யாக்கப்பட்டு உள்ளது.

68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற்றது. இந்த வாக்குகள் கடந்த ஒரு மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு  இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்து அதிகாரப்பூர்வமாக வெற்றி தோல்வி அறிவிக்கப்பட்டு உள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவினர் இங்கும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டனர். அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக களத்தில் வரிந்து கட்டியிருந்தன. மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், 39 இடங்களில் முன்னிலை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது.

68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 39 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதில் 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல பாஜக 26 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் பாஜக 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும், சுயேச்சை ஆதரவுடன் பெரும்பான்மை பெற முடியாத நிலை உள்ளது. அதே வேளையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலை பேசும்  குதிரை பேரம் நடை வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது.

தேர்தல் முடிவுகளுக்கு https://results.eci.gov.in/ இணையதளத்தை பார்க்கலாம்.