சென்னை: பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதனால்  உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய வருவாப் இழப்பீட்டினை தமிழ்நாடு அரரே ஈடுசெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில்  பிறப்பு,  இறப்பு நிகழ்வு சம்பவங்கள் குறித்து,  21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு/இறப்பு பதிவாளரிடம் பதிவு செய்யப்பட வேண்டும்.  21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ.100 ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதக் கட்டணம் ரூ.200 ஆகவும், ஓராண்டிற்கு மேல் காலதாமதக் கட்டணம் ரூ.500 ஆகவும் அபராதம் கட்டி பதிவு செய்ய வேண்டும்.
தற்போது கொரோனா தொற்று ஊரடங்கு நடவடிக்கையாக,  பிறப்பு இறப்பு பதிவு செய்வதற்கு காலதாமதம் ஏற்படுத்தியது. இதையடுத்து, பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  கூறியிருப்பதாவது,

“கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் / கிராமங்களில், 1-1-2020 முதல் நிகழ்ந்த பிறப்பு/இறப்பு குறித்து காலதாமதமாக பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு பிறப்பு/இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமத கட்டணத்தை வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதை அறிவோம். நமது மருத்துவர்களின் சீரிய முயற்சிகளையும் மீறி தவிர்க்க முடியாத நேர்வுகளில் இறப்புகள் நிகழ்ந்துவிடுகின்றன.

துயரமான இந்த சம்பவத்தில் சில காரணங்களினால் இறப்பு குறித்து வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்தில் அதாவது ‘21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ 100/- ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதக் கட்டணம் ரூ 200/-ஆகவும், ஓராண்டிற்கு மேல் காலதாமதக் கட்டணம் ரூ.500/- ஆகவும் உள்ளது.

பெருந்தொற்றினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், இந்தக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்தி வருவது முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில், இக்கட்டணத்திலிருந்து பொது மக்களுக்கு விலக்களிக்கவும். அந்தக் காலதாமதக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்

அதன் அடிப்படையில் இந்த கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில்/ கிராமங்களில் 1-1-220 முதல் நிகழ்ந்த பிறப்பு / இறப்பு குறிந்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு பிறப்பு இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமதி கட்டணத்தை வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

காலதாமத கட்டண விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு  ஏற்படக்கூடிய வருவாப் இழப்பீட்டினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரரே ஈடுசெய்யும் இருப்பினும் உரிய காயத்தில் பிறப்பு இறப்பினைப் பதிவு செய்ய அனைவரின்  ஒத்துழைப்பும் வேண்டப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.