சென்னை: பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளதால், ஏரியில் இருந்து  உபரி நீர்திறக்கப்பட்டு உள்ளத. இதையடுத்து, கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்வளத்துறை வெளியிட்டு உள்ளது.

சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் ஏரிகளில் ஒன்றாண பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் முழு கொள்அளவை எட்டி உள்ளது. இந்த அணையின்  மொத்த உயரம் 35 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 34.05 அடியை எட்டியது.  தொடர்ந்து நீர் வரத்து வந்துகொண்டிருப்பதால், உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பின் அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது, பூண்டி அணையின் நீர்மட்டம் 34.05 அடியை எட்டிய நிலையில்   அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி அணைக்கான நீர்வரத்து 1,290 கனஅடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பிற்பகல் 1.30-க்கு 1000 கனஅடி உபரிநீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் நீர்திறப்பு படிப்படியாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக,   கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  அதன்படி, அந்த பகுதியில் உள்ள ஆட்ராம்பாக்கம், ஒத்தப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரத்தில வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் வட சென்னையின் புறநகர்பகுதிகளினான புதுக்குப்பம், மணலி, இடையான்சாவடி, எண்ணூர், வெள்ளிவாயல்சாவடி உள்ளிட்ட தாழ்வான பகுதி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.