சென்னை:

வர்தா புயலுக்கு பின் கடந்த மார்ச மாதத்தில் தமிழகத்தில் கூடுதல் மழைபொழிவு இருந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த 2 வாரத்தில் சென்னையில் மழை பொழிவு அதிகளவில் இருக்கும்.

ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் தமிழகத்தில் மழையளவு அதிகளவில் உயர வாய்ப்பு உள்ளது. அதன் பின் மேற்கு கடற்கரை பகுதியில் மழை பொழிவு இருக்கும். இதர தமிழக வடக்கு மாவட்டங்களான கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இதர பகுதிகளிலும் லேசான மழைப் பொழிவு இருக்கும்.

ஆகஸ்ட் 11ம் தேதிக்கு பிறகு சென்னையில் மழைபொழிவு அதிகரிக்க தொடங்கும். 11ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் மழை தீவிரமடைந்து வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் வரை பரவும்.

தொடர்ந்து தினமும் 100 மி.மீ மழை பொழிவுக்கான வாய்ப்பு இருக்கும். இதனால் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது. எனினும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, வளர்ந்து வரும் பயிர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.