புதுச்சேரி

டைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரி திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை வேட்பாளர் பட்டியல் வெளியிடவில்லை.

புதுச்சேரி தொகுதியில் தமிழகத்தைப் போல் வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இங்கு மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன.  இதில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக 13 இடங்களிலும் காங்கிரஸ் 15 இடங்களிலும் விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒரு இடத்திலும் போட்டியிட உள்ளன.

இதில் திமுக மட்டும் 12 வேட்பாளர்கள் கொண்ட தனது முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.  காங்கிரஸ் சார்பில் நேர்காணல் நடைபெற்ற போதிலும் இதுவரை வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.  இந்த பட்டியல் விரைவில் வெளியாகும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இதைத் தவிர என் ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.  ஆனால் இதுவரை இந்த கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் ஆகிய எதுவும் அறிவிக்கப்படாமல் உள்ளது.   இதனால் அக்கட்சி தொண்டர்கள் சோர்வடைந்துள்ளதாக கூறப்படுகிறது.