டெல்லி:  மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு நியமனங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் மும்பை  துணைத் தலைவராக  நடிகை நக்மாவை காங்கிரஸ் தலைமை நியமனம் செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிகைகளை காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்து வருகிறது.  கட்சியின் மும்பை பிரிவில் மூத்த துணைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் செயலாளர்கள் உட்பட அலுவலகப் பொறுப்பாளர்களை நியமிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒப்புதல் அளித்தார்.

அதன் ஒருபகுதியாக, மும்பை பெருநகரல மாவட்டத் தலைவர்கள் மாற்றப்பட்டு புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.   அதன்படி, முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ மது சவான் உள்பட 6 மூத்த துணைத் தலைவர்கள் மற்றும்,  நடிகை நக்மா மொரார்ஜி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ யூசுப் அப்ரஹானி  உள்பட 15 துணைத் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தலைவர் மற்றும் 2 துணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் மொத்தம்  42 பொதுச் செயலாளர்கள் மற்றும் 76 செயலாளர்கள் மற்றும் 30 நிர்வாக உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கட்சி கடந்த ஆண்டு டிசம்பரில் பாய் ஜக்தாப்பை நகர பிரிவு தலைவராக நியமித்தது, அதே நேரத்தில் சரண் சிங் சப்ரா செயல்பாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் நசீம் கான் பிரச்சாரக் குழுவின் பொறுப்பாளராகவும், அமர்ஜித் மன்ஹாஸ் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ஷெட்டி அறிக்கையாகவும், வெளியீட்டுக் குழுவிற்கு பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டனர்.