சென்னை:

மிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை  (27/05/2020 காலை 10 மணி நிலவரம்) 5, 36, 792 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுக்கப்பட்டு உள்ளதாகவும், அபராதம் தொகை ரூ.8 கோடியை தாண்டி உள்ளதாகவும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனலா ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி தொடங்கி 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு, மே 31ந்தேதி வரை அமலில் உள்ளது.

 ஊரடங்கு சமயத்தின்போது, அரசின் உத்தரவுகளை மீறி வாகனங்களில்  செல்வோர், சாலை விதிகளை மதிக்காமல் செல்போரை காவல்துறையினர் மடக்கி, வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களைப் பறிமுதல் செய்தும்  நடவடிக்கைகளில் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில்,  இன்று காலை 10 மணி வரை,  ஊரடங்கு விதிகளை மீறியதாக, 5 லட்சத்து 36 ஆயிரத்து 792 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

4லட்சத்து 25 ஆயிரத்து 64 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அபராதமாக, ரூ 8 கோடியே 9 லட்சத்து 28 ஆயிரத்து 684 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு காவல்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.