அழகன்குளம், ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன் குளம் என்னும் இடத்தில் பழங்கால பொருட்கள், மற்றும் கட்டிட இடிபாடுகளை தொல்பொருள் துறை கண்டுபிடித்துள்ளது.
கீழடியில் தொல்பொருள் துறை அகழ்வாராயச்சி நிகழ்த்திய போது பண்டைய கால மக்கள் வாழ்ந்ததற்கான பல அடையாளங்கள் தென்பட்டது நினைவிருக்கலாம். தற்போது அழகன் குளம் என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சியை தொல்பொருள்துறை நடத்தியுள்ளது. அழகன்குளம் என்னும் ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை நதி கடலில் சங்கமம் ஆகும் இடத்தில் அமைந்துள்ளது.
கடந்த மே மாதம் முதல் எட்டு முறை இங்கு தொல்பொருள் துறை அகழ்வாராயாச்சியை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில், செங்கல் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகள், சங்கு வளையல் செய்யும் தொழிலகம், இரும்பு உருக்கும் ஆலை. சுட்ட களிமண் உரையாக உள்ள கிணறு, ரோமானிய நாணயங்கள், மண்பானைகள் மற்றும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சங்க காலத்திலேயே செங்கற்கள் கொண்டு தமிழ்நாட்டில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
வளையல் செய்யும் தொழிற்சாலையில் கிடைத்துள்ள உலைகளின் இடிபாடுகள், மற்றும் இரும்பு உருக்கும் ஆலையின் மிச்சங்கள் மற்றும் சிலுவை அடையாளமுள்ள ரோமானிய நாணயங்கள் ஆகியவை தமிழ்நாடு தொழில் துறையில் மேலும் முன்னேறி இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சிலுவை அடையாளமும் ரோமானிய நாணயங்களும் அப்போது ரோம் உடன் தமிழ்நாடு வணிகத் தொடர்பு வைத்திருந்தது என்பதை தெரிவிப்பதாக அகழ்வாராய்ச்சி தலைவர் தெரிவித்துள்ளார்.