சென்னை:

வக்கீல்களின் கல்வி சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வக்கீல்கள் கட்டபஞ்சாயத்து செய்வது தொடர்பான புகார் குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று நடந்தது.

அப்போது நீதிபதி கூறுகையில், ‘‘அனைத்து வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதி இல்லமல் இயங்கும் ‘லெட்டர் பேட்’ சட்ட கல்லூரிகள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளஸ் 2 படிக்காமல் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் ‘லெட்டர் பேட்’ சட்டக் கல்லூரிகளில் சட்ட பட்டத்தை விலைக்கு வாங்குகின்றனர். போலி வக்கீல்களை நீக்க புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். இதன் பின்னரே பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும்’’ என்றார்.

[youtube-feed feed=1]