சென்னை:
தவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் போன்ற பதவிகளுக்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி, எழுத்துத் தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட, செய்திக்குறிப்பில்,

அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தபடி, உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவி களுக்கு, திட்டமிட்ட படி எழுத்துத் தேர்வு நடக்கும். வரும், 17 மற்றும், 18ம் தேதி, காலை மற்றும் மதியம் 19ம் தேதி காலை மட்டும், ஏழு மாவட்டங்களில், தேர்வு நடக்க உள்ளது.

விண்ணப்பதாரர்கள் தேர்வு நுழைவுச்சீட்டை, www.tnpsc.gov.in; www.tnpscexams.in ஆகியவற்றில், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நடக்கும் இடத்தை அறிந்து கொள்ள, தேர்வு நுழைவு சீட்டில், ‘கியூஆர் கோடு’ அச்சிடப்பட்டுள்ளது. அதை, ‘ஸ்கேன்’ செய்து, ‘கூகுள் மேப்’ வழியே, தேர்வுக்கூடம் செல்லலாம். தேர்வு அறைக்குள், மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]