சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறை வாழ்க்கை  இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. திமுக தலைமைக்கு நெருக்கமான செந்தில் பாலாஜி, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதால், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், கடந்த  ஓராண்டாக சிறைப்பறவையாக புழல் சிறையில் இருந்து வருகிறார்.  அவருடைய 39வது ஜாமின் மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டு, அவரது நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பட்டுள்ளதால், அவரது சிறை வாழ்க்கை 2வது ஆண்டாக புழல் சிறையில் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.   இது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஒருகாலத்தில் அரசியல் என்பது சமூக சேவையாக இருந்து வந்தது. ஆனால், தற்போதைய நவீன யுகத்தில் அரசியல் என்பது தொழில் ஆக மாறி உள்ளது. இதனால், அரசியல் (தொழில்) மூலம் லாபத்தை ஈட்டவே இன்றைய அரசியல்வாதிகள் விரும்புகின்றனர்.  தொழிலில் வெற்றியை பெறவே, இன்றைய தலைமுறையினர், அரசியல்வாதியாக  தங்களை காட்டிக்கொள்ள கடுமையான விரும்புகின்றனர். இதனால், அரசியலிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. இதற்காக  பலர், ஆட்சி மாறுவதைபோல, தங்களையும் ஆட்சியார்களுக்கு சாதகமாக பஞ்சோந்திபோல மாறி, தங்களது சுகபோகங்களை தொடர்கின்றனர்.

அரசியல் பணி, ஒரு சமூக சேவை எனும் போது, அரசியலில் சமீபகாலமாக பதவிகளில் இருக்கும்/இருந்த, செல்வாக்குள்ள, புகழ் பெற்றவர்கள் எவராவது இன்றைய கால கட்டத்தில் ஏழையாக இருக்கிறார்களா?  என்று பார்தால், அதற்கான விடை ஜீரோ. அதனால் இன்றைய காலக்கட்டத்தில் அரசியல் என்பது ஒரு தொழிலாகவே மாறி உள்ளது.

இதுபோன்ற நிலைதான் தற்போது சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிலை என்பது 100 சதவிகிதம் உண்மை. தற்போது அவர் திமுகவில் இருந்தாலும், அவர் சிறையில் இருப்பது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது நடைபெற்ற முறைகேடு வழக்கு காரணமாகவே. அதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஓராண்டாக சிறையில் வாடி  வருகிறார்.

அதாவது, கடந்த ஆண்டு (2023)  ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்றுடன்  (2024 ஜுன் 14ந்தேதி)  ஓராண்டு தனது சிறை வாழ்க்கையை கடந்துள்ளார்.   பலமுறை அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று 39வது முறையாக மேலும்  நீட்டிக்கப்பட்டது. இதனால் அவர்  350 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

முன்னாள் திமுக  அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை

திமுக தலைமைக்கு நெருக்கமாக இருந்து வந்த செந்தில் பாலாஜியின் அரசியல் நடவடிக்கை திமுக தலைமைக்கு அவர்மீது நம்பகத்தன்மையை கொடுத்தது. இதனால்  ஈரோடு இடைத்தேர்தலில் பம்பரமாக சுழன்றி பணியாற்றி, திமுக ஆதரவுடன் ஈவிகேஎஸ் இளங்கோவை வெற்றி பெற வைத்து சாதனை படைத்தார். இதனால், அவர் திமுக தலைமைக்கு மேலும் நெருக்கமானார். அதைத்தொடர்ந்து, அவருக்கு  அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தை உடைக்கும் பணி வழங்கப்பட்டது. அதன்படி, செந்தில் பாலாஜியுடம் திறம்பட பணியாற்றி வந்தார். இந்த நிலையில்தான், அவரது மீதான  வழக்கு காரணமாக, அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.

செந்தில் பாலாஜி மறைந்த முதலமைச்சர் ஜெயலிதாவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக வலம் வந்த செந்தில் பாலாஜி 2014 இல் ஓட்டுநர் நடத்துனர் பணி நியமனத்தில் முறையீடு செய்ததாக எழுந்த புகாரில் சிக்கினார். இதுதொடர்பாக திமுக கட்சி சார்பில் அவர்மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டன. திமுக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்கூட செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில்தான்  கடந்த 2011-2015-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக, 1 கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் ஆகிய மூவரும் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரில், செந்தில் பாலாஜி அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறி வழக்கை முடித்து வைத்தது.

 இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2015ம் அஷ்ட  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தால் மட்டுமே சமரசம்” ஏற்பட முடியும். சமரசம் ஏற்பட்டதால் பணம் கைமாறியது உறுதியாகிறது. அதனால், மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி,  தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்யது.. ஆனால், அந்த வழக்கில்,  செந்தில் பாலாஜி பெயர் இடம் பெறவில்லை. இதனால்,    பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மைத்துனர் கார்த்திக் போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்தே  2016 ம் ஆண்ட செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து, அப்போதைய அதிமுகஆட்சியின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா,  செந்தில் பாலாஜியின் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை பறித்தார். இதனால் சில காலம் அமைதியாக இருந்தவர், ஜெ.மறைவைத் தொடர்ந்து,  அதிமுகவில் இருந்து விலகி, டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார். பின்னர்,  அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்து பதவியை பெற்றார்.

இதைத்தொடர்ந்து அவர்மீதான  வழக்கு கிடப்பில் போடப்பட்டது. அதிமுக மற்றும் திமுக  ஆட்சி காலத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதுகுறித்த பாதிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தை நாடினார். அதைத்தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு  அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி, செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், இதை எதிர்த்து செந்தில் பாலாஜி நீதிமன்றத்தை நாடினார். வழக்கு விசாரித்த நீதிமன்றமும்  அமலாக்கத்துறையால் அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதற்கிடையில், செந்தில் பாலாஜி, அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.  இதைத்தொடரந்து,   கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். முன்னதாக, ஆற்றில் மணல் எடுப்பதுதொடர்பாக அவர் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. அதுபோலவே அவர் வெற்றி பெற்றதும், திருச்சி பகுதியில் ஆற்றில் கட்சியினர்  அரசு அதிகாரிகளை மீறி மணல் திருட்டில் ஈடுபட்டுவந்தனர். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. செந்தில் பாலாஜியின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்புக்கு மத்தியில்,  அமலாக்கத்துறை  சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதேபோல அவரால்   பாதிக்கப்பட்ட நபர்களும், தமிழ்நாடு அரசின் காவல்துறை விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அதனால், தங்களது புகார்கள் குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடுமாறு  உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

ஆனால்,  செந்தில் பாலாஜி தரப்பில்,  கடந்த 2022ம் ஆண்டில் இதை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  தன் மீதான வழக்கு பொய்யானது என்றும், அதை  ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது. இந்த வழக்குகளை  கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி  விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை விசாரணை நடத்தி  இரண்டு மாதத்திற்குள்  முடிக்கும்படி குற்ற பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது

இதைத்தொடர்ந்து,   2023ம் ஆண்டு ஜூன் மாதம் 13ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்ட விரோத பரிமாற்றம் தொடர்பாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். செந்தில் பாலாஜி வீடு  மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என பல இடங்களில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.  இரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டதை எதிர்த்து திமுகவினல் மோதலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் சோதனையின்போது,  வீட்டிலிருந்த செந்தில் பாலாஜி எங்கும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து அமலாக்கத்துறைஅதிகாரிகள்,  மறுநாள் (ஜுன்)  14ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தனக்கு நெஞ்சுவலிப்பதாக அலறினார். இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர், செந்தில் பாலாஜி குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று,  நீதிமன்ற உத்தரவுபடி, அவரை, சென்னையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்த சில வாரங்கள் சிறையில் சிகிச்சை பெற்று வந்தார்.  பின்னர், அவரை சிறையில் அடைக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்த நிலையில், அதை ஏற்று நீதிமன்றமும், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, சிறையில் இருந்தபடியே அவ்வப்போது  மருத்துவமனைக்கு வந்து  சிகிச்சை பெற்று வந்ததுடன்,  செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை அமரவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், அவர்மீது குற்றப்பத்திரியை தாக்கல் செய்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவர்து தம்பி வீடுகளில் சோதனை நடத்தியது. இதனால், அவரது தம்பி அசோக்குமார் தலைமறைவானார். அவர் இன்று வரை எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறையும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை காரணமாக கொண்டே அவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை அமர்வு நீதிமன்றம், உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றங்களை நாடிய நிலையில், அவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டே வந்துள்ளது.  ஏற்கனவே 38 முறை அவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 39வது முறையும் அவரது ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதாவது, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், அவரது 39 ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, தனது 2வது ஆண்டு சிறை வாழ்க்கையை சென்னை புழல் சிறையில் தொடங்கி உள்ளார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகஅரசு மூன்றாண்டு சாதனை கொண்டாடி வரும் நிலையில், முன்னாள் திமுக அமைச்சர் ஒருவர் ஊழல் முறைகேட்டுக்காக, கடந்த ஓராண்டு காலம் சிறையிலேயே கழித்துள்ளதும் சாதனைதானே….

சிறையில் 155வது நாளாக அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4 வரை நீட்டிப்பு…