சென்னை: திமுக எம்எல்ஏவும், முன்னாள் பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி நாசர்  உடல் நலக்குறைவால்  சென்னை அப்போலேபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுகவினரிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் இளைஞரணி செயலாளராக பயணத்தை தொடங்கிய ஆவடி நாசர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். அவர் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அவருக்கு பால்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவரது திறமையின்மை மற்றும் அவரது குடும்பத்தினரின் தலையீடு மற்றும் முறைகேடுகளால் சர்ச்சைக்குள்ளானார். இதனால், அவரிடம் இருந்த அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது. இதனால், கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில்,  அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரால் சேர்க்கப்பட்டார். அவருக்கு  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர்  யாரும் அதிகாரப்பூர்வமாக ஏதுவும் தெரிவிக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.