புதுடெல்லி: அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு நாட்டில் அனைவருக்கும் உரிமை உண்டு எனக் கூறியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில், பாரதீய ஜனதா தலைவர்கள் பலர் வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டதுதான் தோல்விக்கு காரணம் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது, “கோலி மரோ மற்றும் இந்தோ-பாக் போட்டி என்பதான பேச்சுகளை பாரதீய ஜனதா தலைவர்கள் கட்டாயம் தவிர்த்திருக்க வேண்டும்.
டெல்லி தேர்தலை நாங்கள் மதிப்பிட்ட விதத்தில் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், இந்தத் தீர்ப்பு குடியுரிமைச் சட்டம் மற்றும் என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான தீர்ப்பு அல்ல. அமைதியான முறையில் போராடுவதற்கு நாட்டில் ஒவ்வொருவருக்குமே உரிமை உள்ளது.
சிஏஏ குறித்து யாரேனும் விவாதிக்க விரும்பினால், எனது அலுவலகத்தில் அதற்கான நேரத்தைப் பெறலாம். 3 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்” என்றார்.