டெல்லி: இந்த ஆண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பபட்டுவிடும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வடமாநிலங்களில் தொற்று பரவல் சற்று குறைந்து வரும் நிலையில், தென்மாநிலங்களில் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. தற்போது 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தொற்று பரவலை தடுக்க தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் தடுப்பூசி போடும் பணிகள் மட்டும் தொய்வின்றி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் செய்தியளார்களிடம் பேசிய, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடு முழுவதும் தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.