உலகளவில் கொரோனா பாதிப்பு 17.01 கோடியையும்,  உயிரிழப்பு 35.37 லட்சத்தையும் கடந்தது…

Must read

ஜெனீவா : உலகளவில் கொரோனா பாதிப்பு 17.01 கோடியையும்,   உயிரிழப்பு 35.37 லட்சத்தையும் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் 2வது அலை உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் தீவிர தாக்குதல்  இந்தியாகடுமையான சேதங்களை உருவாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.01 கோடியை தாண்டி உள்ளது.
இதன்படி உலகம் முழுவதும் தற்போது 170,123,482 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.19 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோன  வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35 லட்சத்து 37 ஆயிரத்து 497 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 14,634,381 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 93,379 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

More articles

Latest article