தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனால் அனைத்து இந்தியரும் பெருமைப்படுவதாக கன்னியாகுமரி பொதுக்கூட்ட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியடைந்தார்.

modi

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் செல்லையில் உள்ள ஐசிஎப் இணைப்புப் பெட்டி கொண்ட தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மோடி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, பேசிய பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய் அளிக்கும் நலத்திட்டத்தின் முதல் தவணையான ரூ.2000 ஒரு கோடியே பத்து லட்சம் விவசாயிகளுக்கு சென்றடைந்ததாக கூறினார்.

abhinandan

மேலும், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த பெண் நிர்மலா சீத்தாராமன் இருப்பதை கண்டு நான் பெருமையடைகிறேன் என கூறினர. இதேபோல், தமிழகத்தை சேர்ந்த விமானி அபிநந்தனை பார்த்து இந்தியர் அனைவரும் பெருமைப்படுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நேற்று முன் தினம் பாகிஸ்தான் விமானப்படை மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானி அபிநந்தன் அந்நாட்டு வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டார். அவரை பாதுகாப்பாக மீட்க இந்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி இன்று மாலை அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அபிநந்தன் இந்தியா திரும்பியதை அறிந்த நாட்டு மக்கள் ஆங்காங்கே பட்டாசுக்கள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.