சென்னை:
குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரீசீலனை செய்யவேண்டும் என்ற மத்தியஅரசுக்கு திமுகத் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளவர், மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பதிலளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தன. தெற்கு டெல்லியின் நியூ பிரண்ட்ச் காலனியில் காவல்துறையினருடன் மோதியதில் நான்கு பொது பேருந்துகள் மற்றும் இரண்டு காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன.
இதுகுறித்து, திமுக தலைவர் மத்தியஅரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். வன்முறை குறித்து, கவலை தெரிவித்த ஸ்டாலின், மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியவர், மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.