துரை

வ்வொரு மாவட்டத்திலும் ஒரு நடைப்பயிற்சி பாதை அமைக்கப்படும் எனச் சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்கள் கொரோனாவுக்குப் பின்னர் நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆயினும் நகர்ப்புறங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள இடம் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர். இதையொட்டி தமிழக அரசு சுகாதார விழிப்புணர்வுத் திட்டமாக ‘ஹெல்த் வாக்’ திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

மாவட்டந்தோறும் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு நடைபாதை என்ற அடிப்படையில், 38 மாவட்டங்களில் நடைப்பயிற்சி பாதைகள் அமைய உள்ளன.  இப்பாதைகளில் குடிநீர், இருக்கை வசதிகளுடன், மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் மருத்துவ முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்தந்தப் பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள் நடைபாதையைப் பராமரிக்கும்.

நேஏறு மதுரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்கப்பட உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையை, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு பிறகு அமைச்சர் மூர்த்தி, மேயர் இந்திராணி, ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோருடன் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.