மாலை செய்திகள்
விஜய் மல்லையா இந்தியா வர விருப்பம், பாஸ்போர்ட் முடக்கத்தை ரத்துசெய்ய விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒட்டகங்கள் வெட்டுவதற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று அயோத்தியில் உள்ள அனுமன் கார்கி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய பகுதிக்கு சென்ற முதல் நேரு-காந்தி குடும்ப உறுப்பினர் ராகுல் காந்தி
அம்மா உணவகத்தினால் ஈர்க்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் அரசு மத்திய பிரதேசதம் மாநிலத்தில் ரூ.10க்கு ‘தாளி’ உணவை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது
மும்பை விக்ரோலி பார்க்சைடு பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அங்குள்ள நடைபாதையில் வியாபாரம் செய்து வந்தார். தான் வியாபாரம் செய்யும் இடத்தை மூதாட்டி ஆக்கிரமித்து உள்ளதாக கூறி, அவரை வியாபாரம் செய்யவிடாமல் பழவியாபாரி ஒருவர் துரத்தியதாக கூறப்படுகிறது. அந்த பழ வியாபாரி வடமாநிலத்தை சேர்ந்தவர். இது குறித்து மூதாட்டி விக்ரோலியை சேர்ந்த நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகர்களிடம் முறையிட்டு உள்ளார். நேற்று அந்த கட்சியை சேர்ந்த 10 பேர் பழவியாபாரியை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். மேலும் அவர் வியாபாரத்திற்காக தள்ளுவண்டியில் வைத்திருந்த பழவகைகளையும் சாலையில் வீசி எறிந்தனர். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இந்த காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
காஷ்மீரில் அரசியல் பிரமுகரின் வீடு புகுந்து துப்பாக்கிகளை பயங்கரவாதிகள் துணிகரமாக கொள்ளையடித்து சென்றனர்
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான உறவுகளால் விரும்பத் தகாதது நிகழ்ந்துவிடக் கூடாது: அமெரிக்கா கவலை
கடலூர் மாவட்டம் விருத் தாசலத்தில் ஒருதலை காதலுக்கு மேலும் ஒரு பெண் பலியாகி உள்ளார்.
விருத்தாசலம் பூதாமூர் ஏனாதிமேட்டை சேர்ந்தவர் செல்லமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகள் புஷ்பலதா*
கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்யபட்ட 10 வகுப்பு மாணவி பலி.  என்ஜினீயரிங் மாணவர் கைது. தாய் செல்வியை பார்ப்ப தற்காக புஷ்பா விரகனூர் ஏரிக்கரைக்கு அடிக்கடி சென்று வந்தார்.இதனை நோட்டமிட்ட அந்த பகு தியை சேர்ந்த என்ஜினீய ரிங் கல்லூரி மாணவர் விக்னேஷ் (18) அவரை பலாத்காரம் செய்ய முடிவு செய்தார் .கடந்த 4ந் தேதி மாணவி சென்ற போது பின் தொடர்ந்து சென்ற மாண வர் விக்னேஷ் திடீரென மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றார். அந்த ஏரிக்கரையிலேயே மறைவான இடத்தில் வைத்து புஷ்பாவை பாலியல பலாத்காரம் செய்ய முயன் றார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததால் கை-கால்களை கயிற்றால் கட்டினார். பின்னர் மாணவியை வலுக்கட்டாயமாக பாலியலபலாத்காரம் செய்து உள்ளார். அப்போது மாணவி போராடியதால் அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் பயந்து போன விக்னேஷ் மாணவியை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.இதுபற்றி மாணவியின் தாய் விரகனூர் போலீசில் புகார் கொடுத்தார். மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அப் போது புஷ்பா விஷம் குடித்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட் டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு புஷ்பா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே போலீசார் விக்னேசை கைது செய்தனர். பிரேத பரிசோதனை முடி வில் தான் அவர் விஷம் குடித்து இறந்தாரா ? அல்லது தாக்கப்பட்டதில் இறந்தாரா? என்று தெரியவரும்.
மனைவி நடத்தையில் சந்தேகம் தலையை வெட்டி கோவில் முன்பு வைத்த கணவர் -நெல்லையை அடுத்த வெள்ளாளன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 47).
வீனஸ், எரி நட்சத்திரங்களை ஆய்வு செய்ய செயற்கைகோளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறினார்
எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும் கருணாநிதி பேச்சு
காவிரி நதிநீர் விவகாரம்: நாளை கர்நாடக அமைச்சரவை கூட்டம்
பச்சமுத்து நிபந்தனை ஜாமீனுக்கு ரூ.75 கோடி வைப்புத் தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. வைப்புத் தொகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செலுத்தியதாக பச்சமுத்துவின் வழக்கறிஞர் வெங்கடேசன் தெரிவித்தார்*
ஆபாச சிடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் அமைச்சர் சந்தீப் குமாருக்கு டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது
பெங்களூருவில் தமிழகத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்பினர் பேரணி நடத்தினர். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர்
முதல்வர் ஸ்கூட்டி திட்டத்தின் கீழ் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த 300 மாணவிகளுக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி ஸ்கூட்டர்கள் வழங்கினார்
நெல்லை: ஆழ்வார்குறிச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் நாயை சிறுத்தை தூக்கிச் சென்றதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கடையம் பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சில நாட்களுக்கு முன் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது
புதுச்சேரி அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் வைத்தியலிங்கம் ஒத்திவைத்தார். கடந்த மாதம் 24ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது
புதுச்சேரி விவசாய கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் கந்த சாமி தெரிவித்துள்ளார். இதேபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் வை-பை வசதி அமைக்கப்படும் என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். முதியோர் உதவித்தொகை ரூ.100 உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்
காரைக்காலுக்கு 7 டிஎம்சி தண்ணீர் தர வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக உறுப்பினர் சிவா கொண்டு வந்த தனி நபர் தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது
கொல்கத்தா பிரஸிடென்ஸி பல்கலைக்கழகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளாமான புத்தகங்கள் எரிந்து நாசமாகின. பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 5 தீயணைப்பு படை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன
திருத்தணி சுற்றுவட்டார ஊர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் போலீசாரும், எல்லை பாதுகாப்பு படையினரும் சேர்ந்து நடத்திய சோதனையில் 10 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன
சென்னை மாநகராட்சி கூட்டம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடிவடைய இருந்த சென்னை மாநகராட்சி கூட்டம் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு நாளையுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமிழகம் வந்தடைந்தார். குன்னூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  விமானம் மூலம் பிரணாப் முகர்ஜி கோவை விமான நிலையம் வந்துள்ளார். கோவை விமான நிலையம் வந்த பிரணாப்பை ஆளுநர் பூங்கொத்து கொடுத்தது வரவேற்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரணாப் முகர்ஜி குன்னூர் சென்றார். வெலிங்கடனில் நடைபெறும் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்பதற்காக பிரணாப் முகர்ஜி வருகை தந்துள்ளார்
ஸ்பெயின் நாட்டில் கலிசியா என்ற இடத்தில் ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்
நெல்லையில் உறுப்பு தான ஆபரேசன்கள் ஏன் அரசு மருத்துவமனையில் நடப்பதில்லை: நெல்லை மருத்துவமனை டீன் மழுப்பல் -நெல்லையில் மூளைச்சாவடைந்த அவினாஷ், சரவணன் உள்ளிட்டோரின் உடல் உறுப்புகள் தானம், தனியார் மருத்துவமனைகள் மூலமாக நடக்கின்றன. ஆனால் நெல்லை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அதற்கான வாய்ப்புகள் இல்லையா என கேள்விஎழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த, முதல்வர் முனவரா, தற்போதுதான் அதற்கான அனுமதியை அரசு அளித்திருப்பதாகவும், தற்போது புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவததாகவும் இன்னமும் பத்து மாதங்களில் அனைத்து உறுப்பு தான ஆபரேசன்களும் இங்கேயே மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஆனால் அவரது பதில் மழுப்பலாகவே இருந்தது.
காவிரி விவகாரம்: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்
பெங்களூரு: கர்நாடக விவசாயிகள் மீது தடியடி