வாஷிங்டன்:
மெரிக்க விண்வெளி வீரரான ஜெஃப் வில்லியம்ஸ் 172 நாட்கள் தொடர்ந்து விண்ணில் இருந்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளார். 4 முறை விண்வெளிக்குச் சென்றுள்ள இவர், ஒட்டுமொத்தமாக 534 நாட்களை விண்ணில் கழித்துள்ளார்.
இதையடுத்து விண்வெளியில் அதிக நாட்கள் இருந்த அமெரிக்கர் என்ற பெருமையை ஜெஃப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் சார்பில் இந்தப் பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்த விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி வரும் ஏப்ரல் முதல் தேதியன்று நாசாவில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
1jeff-williams 1aa-jeffwilli

ஏற்கனவே  ரஷ்ய வீரர் கென்னடி படல்கா, தனது 5 விண்வெளி பயணங்களின் மூலம் 879 நாட்கள் விண்வெளியில் தங்கி, அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய  வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.