வெனிசுலாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் தம்மால் வழக்கறிஞர் வைத்து வாதாட முடியாது என்பதால் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைத்துவிடுங்கள் என்று நிலக்கரி துறை முன்னாள் செயலர் குப்தா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அரசு பங்களாவில் வசித்து வரும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மனைவி அங்கிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது/
ஆலோசனை கூட்டத்தின் போது துணை கலெக்டரை எம்.எல்.ஏ., கன்னத்தில் அறைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறி உள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தில்லி ரயிலில் தவற விடப்பட்ட ரூ.93,000 இருந்த பணப்பையை, உரியவரிடம் ஒப்படைக்க நேர்மையாக பணியாற்றியதற்காக ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காவலர் பூல் கன்வார் பாராட்டப்பட்டார்.
மதவாதமும், மதவெறி அரசிலும் நாடு முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது–திருமாவளவன்
தமிழக ஆளுனர் ரோசய்யாவின் பதவிக் காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் அவருடைய பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்ட சபையில் மேகதாதுவில் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்படுவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.அந்தப்பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்ற தங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.எனவே சட்டப்பேரவையிலிருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பெரும்பாலான செல்வந்தர்கள் வரி ஏய்ப்புக்காக மற்றொருவர் பெயரில் பினாமி சொத்துக்களை வாங்குவது வழக்கம். இது தொடர்பான புதிய சட்ட மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது.
இச்சட்டத்தின்படி, பினாமி சொத்து வாங்குவோருக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறையும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக அல்லது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம் என சீனா கூறியுள்ளது
ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட உலக கலாச்சார திருவிழாவின் போது டில்லியில் யமுனை நதிக்கரை சேதப்படுத்தப்பட்டது உண்மை தான் என நிபுணர்கள் குழு, தேசிய பசுமை தீர்ப்பாய கோர்ட்டில் அறிக்கை அளித்துள்ளது.
இந்தோனேஷிய கடல் பகுதியில் மலேசிய எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சேது சமுத்திர திட்டப் பணிகளின் போது ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை மாற்றியமைப்பது தொடர்பான ஆய்வறிக்கையை, தெற்கு ரயில்வே அதிகாரிகள் இந்திய ரயில்வே துறையிடம் அளித்துள்ளனர்.
சாதனை படைக்கும் இந்தியர்களுக்கு ‘ஈகோ’வும் அதிகமாக இருக்கிறது என இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை புறப்பட்ட ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்தியா முழுவதும் அனைத்து டோல்கேட்டிலும் பத்திரிக்கையார்களுக்கு
இனி கட்டணம் கிடையாது் அடையாள அட்டை கண்டிப்பாக இருந்தால் அனுமதிக்கபடும் -மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்
மதுரை விளக்குத்தூண் அருகே போஸ்டர் அப்புறப்படுத்தக்கோரி டிராபிக் ராமசாமி போராட்டம்.