📻மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டுவெடிப்பு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் .மணிப்பூர் மாநிலம் இம்பால்-திமாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டு வெடித்ததில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📻மருத்துவ நுழைவுத் தேர்வு கேள்வித்தாள் வெளியானது பற்றிய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை. மருத்துவ நுழைவுத் தேர்வு கேள்வித்தாள் வெளியானது பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது. மருத்துவ பொது நுழைவு தேர்வு கேள்வித்தாள் நைனிடால் பகுதியில் வெளியானதாக புகார் எழுந்தது. புகார் குறித்து விசாரணை நடத்தி மறுத்தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி அன்சுல் சர்மா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்  என்ற கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
📻திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா லோக்சபாவில் தாக்கல். ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்து நிதி அமைச்சர் அருண்ஜேட்லி உரை அருண்ஜேட்லி உரையைத் தொடர்ந்து ஜிஎஸ்டி மசோதா மீது லோக்சபாவில் விவாதம்
📻சிவகாசி அருகே ராமசாமி புரத்தில் பட்டாசு கடை மற்றும் குடோனில் தீவிபத்து…
tamilnadu
📻இனி வி.ஏ.ஓ க்கள் தாங்கள் பணியாற்றும் கிராமத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும்.. தமிழக அரசு உத்தரவு! கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் கிராமத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் முதன்மைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான அதுல்ய மிஸ்ரா கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓக்கள்) திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை, தங்களுக்கென உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். முழுநேர அரசு ஊழியர்கள் என்பதால் வருகைப்பதிவேடு மற்றும் முகாம் பதிவேடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டும். வருவாய் ஆய்வாளர்கள் இப்பதிவேடுகளை வாரம் ஒருமுறை தணிக்கை செய்து, தாசில்தார் பார்வைக்கு அனுப்ப வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்கள், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமத்திற்கோ, களப்பணிக்கோ அல்லது பிற அலுவல் நிமித்தமாக அலுவலகத்தை விட்டுச் செல்லும்போது, அலுவலுக்கான காரணம் மற்றும் உத்தேசமாக திரும்பும்நேரம் ஆகியவற்றை, பொதுமக்கள் காணும்வகையில் அறிவிப்புப் பலகையில் குறிப்பிட வேண்டும். மேலும், பொதுமக்கள் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில், தங்களது கைப்பேசி எண்ணை குறிப்பிட்டிருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள், நியமிக்கப்பட்டுள்ள கிராமத்தில் கட்டாயம் தங்கி பணியாற்றவேண்டும். உயர் அலுவலர்கள் கோரும் தகவல், அறிக்கைகளை நேரில் சென்று அளிப்பதை, இயன்றவரை காலவிரயத்தை கருத்தில்கொண்டு தவிர்க்க வேண்டும். அவற்றை அனுப்ப மின்னஞ்சலை பயன்படுத்தலாம். மேற்கண்ட நெறிமுறைகள் தவறாது கடைபிடிக்கப்படுறதா என்பது பற்றி மண்டல துணை தாசில்தார், தாசில்தார், ஆர்டிஓ ஆகியோர், கிராமங்களில் முகாம் செல்லும் நேரங்களில் கண்காணிக்க வேண்டும். இதில் எவ்வித விதிமீறல்களுக்கும் இடம் தரக்கூடாது. இந்த நெறிமுறைகளை பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📻முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் தாக்கல் செய்த மனு: முடித்து வைத்து ஐகோர்ட் தள்ளுபடி முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் தாக்கல் செய்த மனு: முடித்து வைத்து ஐகோர்ட் தள்ளுபடி
📻பொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை பெரம்பூர், : திரு.வி.க நகரில் பொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன் கடையை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
📻நெல்லை, தூத்துக்குடியில் போலி டாக்டர்கள் அதிகரிப்பு. புளியங்குடி : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏழைகளின் உயிரோடு விளையாடும் போலி டாக்டர்கள் குறித்து முதல்வரின் சிறப்பு பிரிவுக்கு புகார்கள் குவிந்தன. இதன் எதிரொலியாக அதிரடி சோதனை நடத்தி போலி டாக்டர்களை கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே ராயகிரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரஷ்யாவில் மருத்துவம் படித்து விட்டு இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தேர்வை எழுதாமல் விதிகளை மீறி சிகிச்சையளித்த டாக்டர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கும் போலீசார் சீல் வைத்தனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், தச்சநல்லூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், ஏரல், முடிவைத்தானேந்தல், திருச்செந்தூர், நாலுமாவடி, உடன்குடி, சாயர்புரம் உள்ளிட்ட ஊர்களில் போலி டாக்டர்கள் ஏழைகளுக்கு சிகிச்சையளிப்பதாக அரசுக்கு புகார்கள் குவிந்துள்ளன.
📻கோவில்பட்டியில் காளியம்மன் சிலை கண் திறந்ததாக பரபரப்பு. கோவில்பட்டி : கோவில்பட்டியில் காளியம்மன் சிலை கண் திறந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவில்பட்டி கடலைக்கார தெருவில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி பொங்கல் மற்றும் பல்வேறு திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு கோயிலில் பூசாரி சிறப்பு பூஜை செய்த போது அம்மன் சிலை கண் திறந்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் பரவியதும் செக்கடிதெரு, கடலைக்காரதெரு, புதுரோடு, தனுஷ்கோடியாபுரம் தெரு, மெயின்ரோடு, ஜோதிநகர், வக்கீல் தெரு போன்ற பல்வேறு தெருக்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோயிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.
📻அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டாகியும் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதில் அலட்சியம். சென்னை, : மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
📻சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்; கண்டுகொள்ளாத அரசு! சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுள்ள 13 தமிழர்கள் தங்களை மீட்குமாறு மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
📻ஹைதராபாத்தில் பயங்கரம் : என்கவுண்டரில் பிரபல “கேங்ஸ்டர்” சுட்டுக் கொலை!
ஹைதராபாத் : ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து, ஹைதராபாத் அருகே தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அங்கு பதுங்கியிருந்தது நக்சலைட்டாக இருந்து, ரவுடி கும்பல் தலைவனாக மாறிய நயீம் மற்றும் கூட்டாளிகள் என தெரியவந்தது. அந்த கும்பல் போலீசாரை சுட்டுவிட்டு தப்பியோட முயன்றபோது போலீசார் பதில் தாக்குதல் நடத்தி நயீம் மற்றும் அவனது கூட்டாளியை கொன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
📻டெல்லி: மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 13500 பேரை மீண்டும் பணியில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 2011 ல் மக்கள் நலப்பணியாளர் 13500 பேரை தமிழக அரசு பணி நீக்கம் செய்தது. மக்கள் நலப்பணியாளரின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது.
📻மணிரத்தினம் அலுவலகத்தில் தீ விபத்து.  சென்னையில் திரைப்பட இயக்குனர் மணிரத்தினம் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பல லட்சம் மதிப்புள்ள தொழிநுட்ப சாதனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.
📻பிறந்து பத்துமாதமே ஆன பச்சிளம்குழந்தைக்கு பீர் கொடுத்து குடிக்க வற்புறுத்தும் கொடூர மனம் கொண்ட தந்தையைக் கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
📻கொடைக்கானல் மக்கள் அச்சம் புலியூரை மிரட்டும் யானைகள் கொடைக்கானல் அருகே முகாமிட்டிருக்கும் யானைக் கூட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ளது புலியூர். நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பத்துக்கும் மேற்பட்ட யானைகள், இங்குள்ள விவசாய பகுதி அருகே முகாமிட்டன. இதை பார்த்து அச்சமடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில், வனத்துறை ஊழியர்கள் 10 பேர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் யானைகளை வனப்பகுதியில் விரட்டும் பணியில் இறங்கினர். ஆனால் யானைகள் தொடர்ந்து முகாமிட்டிருந்தன. யானைகளை விரட்ட பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
📻கிரானைட் முறைகேடு வழக்கு: பழனிச்சாமி, சுரேஷ்குமார் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு. கிரானைட் முறைகேடு வழக்கில் பழனிச்சாமி விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் சுரேஷ்குமார் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இருவரின் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது.
📻விநாயகர் சதுர்த்தி விழா : குமரியில் 4500 சிலைகள் பூஜை. குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மிசா.சோமன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாகர்கோவில் நகர தலைவர் நம்பிராஜன், பொதுச்செயலாளர் மகாராஜன், துணைதலைவர் திருமணி, ஒன்றிய நிர்வாகிகள் செந்தில், ராஜசேகரன், ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் ஒன்றரை அடியில் இருந்து 11.5 அடி வரையிலான 4500 சிலைகள் செப்டம்பர் 5ம் தேதி பூஜை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
📻வானதி சீனிவாசனுக்கு முன்ஜாமீன் : உயர்நீதிமன்றம். வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பரப்புரை முடிவடைந்த நிலையில் கோவையில் பரப்புரை செய்ததாக வானதி மீது அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
📻6 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்! சிவகாசி அருகே உள்ள பெரியபொட்டல்பட்டியில் 6 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அடிப்படி வசதிகள் வேண்டி போராட்டம் நடத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
📻16 ஆண்டுகால உண்ணாவிரதத்தை நாளை முடித்துக் கொள்கிறார் இரோம் ஷர்மிளா. மணிப்பூர்: மணிப்பூர் மாநில உரிமைகளுக்காக போராடி வரும் இரோம் ஷர்மிளா (44), தனது 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை காலை முடித்துக் கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📻மாயமான விமானம்: ஆழ்கடலில் தேடும் பணியியை தொடங்கியது சாகர் நிதி. சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவத்தளத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் – 32 விமானம் கடந்த 22 ஆம் தேதி அந்தமானுக்கு சென்ற போது மாயமானது. மாயமான இந்த விமானத்தை 2 ஆய்வு கப்பல்கள் கொண்டு ஆழ்கடலில் தேடும் பணி இன்று தொடங்கியது. விபத்து நடந்திருக்கலாம் என கருதப்படும் கடல் பகுதியில் இந்த தேடும் பணி நடைபெறுகிறது. சுமார் 220 கடல் மைல் தொலைவில் சென்னை கடற்கரை பகுதியை உள்ளடக்கி 169 மைல் வரை தேடுதல் பணி நடைபெறும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது பருவநிலை சீராக இருப்பதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்படாது எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான சாகர் நிதி என்ற ஆராய்ச்சி கப்பல் மொரிஷியஸ் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
rajnath
📻காஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தி – ராஜ்நாத் சிங் சந்திப்பு. காஷ்மீரில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களால் மாநிலத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
📻லாரி மோதி டிராக்டர் நொறுங்கியது: 2 பேர் உடல் சிதறி பரிதாப சாவு; மீஞ்சூர் அருகே விபத்து. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதியதில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.
📻ஆந்திர சிறையில் வாடும் தமிழர்கள்; விடுவிக்க அ.தி.முக வலியுறுத்தல். ஆந்திர சிறையில் வாடும் 32 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபாவில் அதிமுகவை சேர்ந்த ஆரணி எம்.பி., எழுமலை வலியுறுத்தினார். இன்றைய ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. லோக்சபாவில் எம்.பி., எழுமலை பேசியதாவது:சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரம் வெட்ட வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆந்திர வன சட்டப்படி குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் யாரும் எங்கும் செல்ல முடியும். ஏழைகள் என்றால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யலாமா ? கைது செய்யப்பட்டுள்ள 32 பேரை விடுவிக்க தமிழக முதல்வர், ஆந்திர அரசை வற்புறுத்தியுள்ளார்.
arun
📻வரியை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்யும்: அருண் ஜெட்லி. வரிகள் எவ்வளவு என்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்யும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். மாநிலங்களவையில் திருத்தப்பட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த போது அவர் பேசினார்.
📻மாயாவதியை அவதூறாக பேசிய விவகாரம்: சிறையில் இருந்து தயாசங்கர் விடுதலை; பகுஜன்சமாஜ் கடும் எதிர்ப்பு
📻கிணறு தோண்டும் பணியின் போது மண்ணில் புதைந்தவர் மற்றொருவர் உடல் மீட்பு. ரமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானியில் அருகே குத்துக்கல்வலசை கிராமத்தில் கிணறு தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. கிணறு தோண்டும் பணியின் போது மண் சரிந்ததில் 2 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். அதில் சின்னையா என்பவர் உடல் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவர் பால்சாமி உடலும் மீட்கப்பட்டது.
📻உலகிலேயே முதல்முறையாக பீட்சா வழங்கும் ஏடிஎம் அமெரிக்காவில் அறிமுகம்
உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில் பீட்சா ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.
📻தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவை முடக்கம் அட் லான்டா: அமெரிக்காவில் மிகவும் பிரபலமான டெல்டா ஏர்லைன்ஸ் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களையும் தரையிறக்கம் செய்துள்ளது. விரைவில் நிலைமையை சரிசெய்து விமானம் சேவை தொடங்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.